ரா.தங்கமணி
ஈப்போ-
ஈப்போ லிட்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள தீபாவளிச் சந்தையில் அமைக்கப்படவுள்ள கடைகளுக்கான கட்டணம் கடந்தாண்டை காட்டிலும் குறைவாக இருக்கும் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்த தீபாவளிச் சந்தைக்காக பேரா மாநில அரசு, அரசு இலாகாக்கள், வணிகர்கள், பொது இயக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய
ஒரு செயற்குழுவை அமைத்துள்ளது.
அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை தீபாவளிச் சந்தை நடைபெறவுள்ள நிலையில் அக்டோபர் 24 முதல் நவம்பர் 4ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்று நேற்றிரவு நடைபெற்ற செயலவைக் கூட்டத்திற்கு பின்னர் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
தீபாவளிச் சந்தைக்கான கடைகள் கடந்தாண்டை போலவே அமைக்கப்படும் எனவும் கடைகளுக்கான கட்டணத்தை ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்திடம் செலுத்த வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், இந்த தீபாவளிச் சந்தையில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கே எடுப்பர் எனவும் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஈப்போ லிட்டில் இந்தியாவிலுள்ள வி.கே.கல்யாண சுந்தரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்தின் தலைவர் திருமதி கலா பாலசுப்பிரமணியம், அதன் செயலவையினர், வணிகர்கள், பொது இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment