ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
சிலாங்கூரிலுள்ள வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் நலனை பாதுகாப்பதில் நடப்பு அரசாங்கம் தவறி விடாது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் குறிப்பிட்டார்.
பி40 பிரிவுக்குட்பட்ட மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பல்வேறு ஆக்ககரமான திட்டங்களை சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
'பரிவுமிக்க அரசாங்கம்' எனும் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு உதவும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக 'ஹிஜ்ரா' திட்டத்தின் கீழ் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோருக்குமு ஈடுபட விரும்புபவர்களுக்கும் வர்த்தக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
நகர் முழுவதும் இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தி மக்களின் பொது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்துள்ளோம்.
மக்களின் தேவைகளை அறிந்து சிலாங்கூர் மாநில அரசு ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் எவ்வித மாற்றுக் கொள்கையையும் ஆளும் பக்காத்தான் அரசாங்கம் கொண்டிருக்காது என்று "பெர்னாமா ரேடியோ"வுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கணபதி ராவ் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment