டெல்லி-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடால் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாக இன்று மாலை மரணம் அடைந்தார்.
வயது மூப்பின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென உடல்நலப் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் காலமனார் என மருத்துவனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா வாஜ்பாயின் மறைவைத் தொடர்ந்து பிரதமர்
நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment