Thursday, 9 August 2018

செடிக் பிரிவுக்கு அமைச்சர் வேதமூர்த்தி தலைமையேற்றார்

கோலாலம்பூர்-
இந்தியர் சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவுக்கு (செடிக்) இனி ஒற்றுமை துறை, சிறுபான்மையினர் நலப் பிரிவு அமைச்சர் பி.வேதமூர்த்தியின் வசம் கொண்டுவரப் பட்டுள்ளது.

பிரதமர் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள செடிக் பிரிவுக்கு அமைச்சர் வேதமூர்த்தி பொறுப்பேற்கிறார்.

கடந்த ஆட்சியின்போது 800 மேற்பட்ட அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் செடிப் பிரிவிடமிருந்து மானியங்களை பெற்றுள்ளன.

அந்த மானியங்கள் யாவும் முறையாக நிர்வகிக்கப்பட்டுள்ளவா? என்பது கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் என வேதமூர்த்தி தெரிவித்தார்.

செடிக் பிரிவின் கீழ் இந்தியர்  விவகார சிறப்பு அமலாக்கப் பிரிவு (எஸ்ஐடிஎஃப்), இந்திய தொழில் முனைவர் உருமாற்ற சிறப்பு செயலகம் (சீட்), தமிழ்ப்பள்ளிகள் நடவடிக்கைக் குழு ஆகியவை செயல்பட்டு வந்தன.


No comments:

Post a Comment