ஷா ஆலம்-
சொஸ்மா சட்டத்தை அகற்றுவதை விட போலீஸ் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்தலாம் என சட்ட வல்லுனர் அட்னான் செமான் தெரிவித்தார்.
குற்றவியல் பாதுகாப்பு சட்டம் 2012 ( சிறப்பு நடவடிக்கை) எனப்படும் சொஸ்மா சட்டத்தின் கீழ் அதிகார அத்துமீறம் இல்லாதிருப்பதை உறுதி செய்ய இது அவசியமாகும்.
சொஸ்மா சட்டம் போலீசாருக்கு முழு அதிகாரத்தையும் வழங்குவதால் அதனை தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
'என்னுடைய கருத்தின்படி சொஸ்மா சட்டம் அகற்றப்படுவதை விட போலீஸ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் அதிகாரத்தை கட்டுப்படுத்துவற்கான மாற்றுவழியை கண்டறிய வேண்டும்.'
குற்றவியல் சம்பவங்களை துடைத்தொழிப்பதற்கு சொஸ்மா சட்டம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அவர், இச்சட்டத்தின் வழி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொள்வர்.
கூட்டரசு அரசியலமைப்பின் 149ஆவது பிரிவை அடிப்படையாகக் கொண்டு சொஸ்மா மீது கவனம் செலுத்த வேண்டும்.
அரசியல் நோக்கங்களுக்காக சொஸ்மா சட்டம் தவறாக பயன்படுத்துவதை தொட்டு பேசிய அவர், பிரதமர் துன் மகாதீர் வெளிபடுத்திய கருத்தில் உண்மை உள்ளது.
'சொஸ்மா சட்டத்தின் வழி அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதை மறுக்க முடியாது, மனிதர்களின் முடிவுக்கேற்ப பிற சட்டங்களும் துஷ்பிரயோகம் செய்யப்படலாம்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தையும் தலைவர்களையும் விமர்சித்த பக்காத்தான் ஹராப்பான் ஆர்வலர்களான மரியா சின் அப்துல்லா, டத்தோ கைருடின் அபு ஹசான், மத்தியாஸ் சாங் போன்றவர்களை தேசிய முன்னணி அரசாங்கம் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
அரசியல் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பற்காக சொஸ்மா தவறாக கையாளப்பட்டுள்ளது.
இதன்வழி பொது நலனுக்கும் தேச பாதுகாப்புக்கும் பயங்கரவாதத்தை துடைத்தொழிப்பதற்கும் உருவாக்கப்பட்ட சொஸ்மா சட்டம் கேள்விக்குறியாக்கப்பட்டது.
அரச மலேசிய போலீஸ் படை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சொஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பயங்கரவாத நடவடிக்கையில் தொடர்புடைய 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
இத்தகையதொரு நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் பயங்கரவாதத்தை துடைத்தொழிப்பதற்கும் பெரிதும் உதவியுள்ளன என சினார் ஹரியானுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment