கோலாலம்பூர்-
பிரிம் உதவித் தொகையை அகற்ற முனைவது ஏழ்மை நிலையில் உள்ளவர்களை தண்டிப்பது போலாகும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையிலே 'பிரிம்' உதவித் தொகை தொடங்கப்பட்டது.
ஆனால், இந்த உதவித் தொகையை வழங்குவதனால் மக்கள் 'சோம்பேறிகளாக' உருவெடுக்க வழிவகுக்கிறது என காரணம் காட்டி அதனை அகற்ற நினைப்பது வறுமையிலுள்ள மக்களை தண்டிப்பது போலாகும்.
மேலும், பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் 'பிரிம்' உதவித் தொகை தொடரும் என கூறிவிட்டு, ஆட்சியை பிடித்த பின்னர் மக்களை ஏமாற்ற முனையக்கூடாது என்று டத்தோஸ்ரீ நஜிப் கூறினார்.
No comments:
Post a Comment