ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
1எம்டிபி விவகாரத்தால் 60 ஆண்டுகால ஆட்சியை இழந்திருப்பதால் அதற்கு காரணமான முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அம்னோவிலிருந்து விலக்கப்படுவாரா? என்ற கேள்வி பரலவாக எழுந்துள்ளது.
நிதி முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் டத்தோஸ்ரீ நஜிப் மீது சுமத்தப்பட்டுள்ளதால் அவரை தற்காப்பதிலேயே அம்னோவின் நேரம் வீணடிக்கப்படாது அதன் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறியுள்ளார்.
மேலும் டத்தோஸ்ரீ நஜிப் மீதான வழக்குகள் மக்களிடையே அம்னோவின் செல்வாக்கை குறைந்து கொண்டே வருவதால் கால மாறுதலுக்கு ஏற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
அம்னோவின் செல்வாக்கு மீண்டும் தலைநிமிர டத்தோஸ்ரீ நஜிப் அம்னோவிலிருந்து நீக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment