கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சியின் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் துணைப் பிரதமர், பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து விலகப்போவதில்லை என்று டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
'கண்டிப்பாக இப்பதவிகளிலிருந்து விலகப் போவதில்லை' என அவர் உறுதிபட கூறியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சி தேர்தலில் தனது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக டத்தோஸ்ரீ வான் அஸிஸா தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment