கோலாலம்பூர்-
நாட்டிலுள்ள டோல் சாவடிகளை அகற்றுவதற்கு அரசாங்கம் தற்போது எண்ணம் கொண்டிருக்கவில்லை எனவும் அதற்கான இழப்பீடுகளை தற்போது ஈடு செய்ய முடியாது என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி அமைச்சர் பாரு பியான் தெரிவித்தார்.
டோல்களை அகற்றுவதனால் அதனால் சலுகை பெற்று வரும் நிறுவனங்களுக்கு 400 பில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும்.
தற்போதைய சூழலில் அவ்வளவு பெரிய தொகையை கொடுப்பது சாத்தியம் இல்லாததால் அத்திட்டத்தை அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளதாக அவர் சொன்னார்.
No comments:
Post a Comment