Wednesday, 15 August 2018

ஈப்போ மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்- சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
ஈப்போ மருத்துவமனையில் நிலவும் வாகன நிறுத்துமிடப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்று பேரா மாநில சுகாதாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

இம்மருத்துவமனையில் உள்ள தற்போதைய வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறை நிலவுகிறது. அதோடு, புதிதாக கட்டப்பட்டு வரும் பெண்கள், குழந்தைகள் சிறப்பு பிரிவு, இருதய சோதனை கட்டடத்தில் கூட 300 வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. ஆனால் அதுவும் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.

இம்மருத்துவமனைக்கு எதிரில் ஈப்போ மாநகர் மன்றத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை மருத்துவமனை வாகன நிறுத்துமிடமாக கையகப்படுத்தினால் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

அதோடு, நோயாளியை பார்க்க வருபவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் 4,5 வாகனங்களில் வருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். முடிந்த அளவு  ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே வாகனத்தில் வருகை அளிக்க வேண்டும் என்று சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் கூறினார்.

No comments:

Post a Comment