Sunday, 12 August 2018

பலாக்கோங் இடைத் தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டி- மசீச அறிவிப்பு


கோலாலம்பூர்-
பலாக்கோங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மசீச தனது சொந்த சின்னத்தில் போட்டியிட போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

கட்சியின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று கூடிய கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் அதன் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்தார்.

கட்சியை புதுமைப்படுத்தும் முயற்சியில் நாம் அக்கறை செலுத்துவது அவசியமாகும்.  மசீசவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாலேயே கருதுகிறோம். புதிய பாதையில் இனி நாம் பயணிக்க போகிறோம் என அவர் சொன்னார்.

60% விழுக்காடு அதிகமுள்ள சீன வாக்காளர்களை கவர பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியில் சொந்த சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக அவர் சொன்னார்.

பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் எடி இங் தியான் சீ  கடந்த ஜூலை 20ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்ததை அடுத்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேசிய முன்னணியின் மிகப் பெரிய இரண்டாவது கட்சியான மசீசவின் இந்த அறிவிப்பு மலேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த தேசிய முன்னணி நடந்து முடிந்த 14 ஆவது பொதுத் தேரதலில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment