Friday, 17 August 2018

பேராவை குறி வைப்பாரா டத்தோஸ்ரீ அன்வார்?


கோலாலம்பூர்-
தனது அரசியல் வாழ்வின் அடுத்தக்கட்ட நகர்வுகளுக்காக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேரா மாநிலத்தை குறி வைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதமராக பதவி வகித்து வரும் துன் டாக்டர் மகாதீருக்கு பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமாக பதவியேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பிரதமாக பதவியேற்பதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள டத்தோஸ்ரீ அன்வார் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்நிலையில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த இரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனவாருக்கு தங்களது தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மத்திய அரசாங்கம் மட்டுமல்லாது பேரா மாநிலமும் பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ளதால் இங்கு டத்தோஸ்ரீ அனவார் வெற்றி பெறுவது மிக சுலபமானதாகும்.

விட்டுக் கொடுக்கப்படும் தொகுதியை ஏற்றுக் கொண்டு அனவார் பேராவில் போட்டியிடுவாரா? அல்லது அவரது கவனம் வேறொரு மாநிலத்திற்கு திசை திரும்புமா? என்பது கேள்விக்குறியே.


No comments:

Post a Comment