சென்னை-
கலைஞர் மு.கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்ததால் அசாதரண சூழல் ஏற்பட்டுள்ளது.
கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என காவேரி மருத்துவமனையின் முன்பு திரண்டுள்ள தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முனைந்துள்ளனர்.
கலைருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தொண்டர்கள் மிரட்டுவதால் "தமிழ்நாடு" போராட்டத்தால் ஸ்தம்பிக்குமா? எனும் அசாதாரண சூழல் நிலவுகிறது.
No comments:
Post a Comment