Saturday, 18 August 2018

இந்தியர்களின் பிரச்சினைகளில் பிறரது பிரச்சினையை திணிக்காதீர்- கணபதி ராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போது அதில் பிறர் பிரச்சினைகளை திணிப்பதை அனைத்துத் தரப்பினரும் கைவிட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் வலியுறுத்தினார்.

இந்தியர்களுக்கான குடியுரிமை, கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்படும்போது பிற இனத்தினர், அந்நிய நாட்டவர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை கொண்டு வந்து இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முட்டுக்கட்டை ஏற்படுத்தக்கூடாது.

இதனால் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு காணப்படாமல் இன்னமும் நீண்டு கொண்டிருக்கிறது.

இத்தகைய நடவடிக்கை இன்னும் நீடிக்கப்படாமல் இருக்க இந்தியர்களின் பிரச்சினைகளில் பிறரது பிரச்சினையை திணிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.



No comments:

Post a Comment