ஈப்போ-
பேரா மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தீபாவளி கொண்டாட்டம் இம்முறை 'மக்கள் தீபாவளி'யாக கொண்டாடப்படும் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் கொண்டாடப்படும் தீபாவளி சந்தை குறித்து அரசு இலாகாக்கள், லிட்டில் இந்தியா வணிகர்கள், அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்.
வரும் 17ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு மாநில அரசு செயலகத்தில் உள்ள சந்திப்பு அறையில் (UPEN) இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
நியாயமான விலை
இந்த தீபாவளிச் சந்தையில் அமைக்கப்படவுள்ள கடைகள் நியாயமான விலையில் வணிகர்களுக்கு வழங்கப்படும்.
தங்களுக்கான கடைகளை வேண்டுவோர் ஈப்போ மாநகர் மன்றத்திடம் அதற்கான தொகையை செலுத்தி கடைகளை பெற்றுக் கொள்ளலாம்.
முடிந்த தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு இந்தியர்கள் பெருமளவு ஆதரவு வழங்கினர். அவர்களின் ஆதரவுக்கு நன்றி கூறும் வகையில் இந்த தீபாவளி மக்கள் தீபாவளியாகக் கொண்டாடப்படவுள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு கடைகள் இல்லை
மேலும், இந்த தீபாவளிச் சந்தையில் உள்ளூர் வியாபாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அந்நிய நாட்டவர்கள் இங்கு வியாபாரம் மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அதோடு, உள்ளூர் வியாபாரிகள் கடைகளை வாங்கி வெளிநாட்டவர்களுக்கு கொடுக்க முடியாது. அது சட்டப்படி குற்றமாகும்.
மேலும், கடைகளுக்கு முன்னாள் அமைக்கப்படவுள்ள கூடாரங்களில் கடை உரிமையாளர்களுக்கு வர்த்தகம் மேற்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment