ரா.தங்கமணி
ஈப்போ-
ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் 24ஆம் ஆண்டு கல்வி யாத்திரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட நிலையில் ஈப்போ வட்டார ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரை இங்குள்ள கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டு வரும் ஶ்ரீ முருகன் நிலையம் கடந்த 8 மாதங்களாக பயிற்சிகளை வழிநடத்தி வந்துள்ளது. கல்வியில் சிறந்து விளங்க ஆண்டவன் அருள் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் கல்வி யாத்திரை நடத்தப்பட்டதாக ஈப்போ வட்டார எஸ்எம்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேகர் நாராயணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு பிரார்த்தனை, சிறப்பு பூசைகள் ஆகியவை நடத்தப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் ஶ்ரீ முருகன் நிலையத்தில் பயின்று இன்று உயர்ந்த நிலையை அடைந்துள்ள வழக்கறிஞர்கள் மலர்விழி சுப்பிரமணியம், மலர்செல்வி சண்முகம், திவ்யா, மருத்துவர்கள் கிஷோர், ஜெயாலன், கணக்காய்வாளர் ரஞ்சனி தேவி விஜயன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டதோடு அவர்களின் அனுபவத்தை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அதோடு எஸ்எம்சி-இன் முன்னாள் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ரவீந்திரன் (தைப்பிங்), எஸ்.சண்முகவேலு (சுங்கை சிப்புட்), விஜயன், ஜி.மாணிக்கராஜ், லெட்சுமணன், தலைமையாசிரியர் பழனிசாமி ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்வில் இம்மாநிலத்தில் பல்வேறு மையங்களைச் சேர்ந்த மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment