ஈப்போ-
பேரா மாநில அரசியல் வரலாற்றில் கறுப்பு புள்ளியாக கருதப்படும் 2009 சம்பவம் மீண்டும் அரங்கேறாமல் இருக்க மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது பாதுகாப்புப் பணிகளை பாதுகாப்பு அதிகாரிகளே மேற்கொள்வர் எனவும் போலீஸ் அதிகாரிகள் கிடையாது என மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஙே கூ ஹாம் தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு மாநில ஆட்சியை கைப்பற்றிய அப்போதைய மக்கள் கூட்டணி அரசு 2009 பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டபோது போலீசாரின் அத்துமீறல் நடவடிக்கையால் சட்டமன்ற சபாநாயகர் வலுகட்டாயமாக அவரது இருக்கையிலிருந்து அகற்றப்பட்டார்.
இச்சம்பவம் மாநில அரசியல் வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாக கருதப்பட்ட வேளையில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறாமல் இருக்க வரும் 7ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது பாதுகாப்பு அதிகாரிகளை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர் எனவும் போலீசார் படையினர் கிடையாது எனவும் அவர் சொன்னார்.
ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment