ரா.தங்கமணி
ஈப்போ-
பள்ளிகளிலுள்ளஅறிவியல் ஆய்வுக் கூடங்களும் ஆய்வுப் பொருட்களும் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய விவகார சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி வலியுறுத்தினார்.
சித்தியவான், ஸ்ரீ மகா கணேசா தமிழ்ப்பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் மீது சுடுநீர் கொட்டியதால் ஈப்போ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை சென்று நலம் விசாரித்த தினகரன், இவ்விவகாரம் குறித்து மாநில கல்வி இலாகா ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வுக் கூடங்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களின் கல்வியில் மட்டுமல்லாது அவர்களின் பாதுகாப்பிலும் பள்ளி நிர்வாகங்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க மாநில கல்வி இலாகா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதனை அனைத்துத் தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்த தினகரன் அவர்களுக்கு ஆறுதல்களை கூறினார்.
No comments:
Post a Comment