சென்னை-
திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மரணமடைந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 நாட்களாக உடல்நலக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆயினும் வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழப்பு மோசமானதைத் தொடர்ந்து உடல்நிலை மோசமானது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment