Saturday, 18 August 2018
மகிழம்பு தமிழ்ப்பள்ளியில் இலட்சியப் பயணம், சாதனை முத்துகள் நிகழ்வுகள்
ஈப்போ-
தேசிய வகை மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, இப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இலட்சியப் பயணம், சாதனை முத்துகள் ஆகிய இரு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
வரும் 18/8/2018 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரை பள்ளியின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாட்டில் நடத்தப்படும் இலட்சியப் பயணம் (யூ.பி.எஸ்.ஆர். தேர்வெழுதும் மாணவர்களுக்கான தன்முனைப்பு பட்டறை) தொடர்ந்து மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது.
பள்ளியின் ஏற்பாட்டில் நடத்தப்படும் சாதனை முத்துக்கள் (மாணவர்களை உற்சாகமூட்டும் அங்கீகாரங்கள்) தொடர்ந்து பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டு நடவடிக்கைகளும் இணைந்து ஒரே நாளில் நடப்பது இதுவே முதல் முறை. இவ்விரண்டும் பள்ளியின் வருடாந்திர அங்கமாக இனி வரும் வருடங்களிலும் தொடரும் என பள்ளியின் முன்னாள் மாணவர் கழக செயலவையினர் கேட்டுக் கொண்டனர்.
மேல் விவரங்களுக்கு: 016-5303538 (கலைசேகர் - கழக ஆலோசகர்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment