ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
இன்று நடைபெற்ற சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தேர்தலில் ச.ராமகவுண்டர் தொகுதித் தலைவராக வெற்றி பெற்றார்.
ராமகவுண்டருக்கு 40 வாக்குகளும் இவரை எதிர்த்து போட்டியிட்ட நடப்பு தலைவர் இளங்கோவன் முத்து 30 வாக்குகளும் பெற்றனர்.
அதோடு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கி.சேகரன் 33 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மும்முனைப் போட்டி நிலவிய துணைத் தலைவர் பதவிக்கு இவரை எதிர்த்து போட்டியிட்ட லெட்சுமணன் 22 வாக்குகளும் அஜாட் கமாலுடின் 15 வாக்குகளும் பெற்றனர்.
கட்சியின் புதிய சட்டவிதிகளின்படி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மட்டுமே இம்முறை போட்டி நிலவியது. இன்று நடைபெற்ற தொகுதி தேர்தலில் 70 பேர் வாக்களித்தனர்.
No comments:
Post a Comment