கம்பார்-
60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு நிரந்தர குடியுரிமை, நீல நிற அடையாள அட்டை ஆகியவற்றை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்ல என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
குடியுரிமை அல்லாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குடியுரிமையும் நீல நிற அடையாள அட்டையும் வழங்க அரசாங்கம் முடிவெடுத்தது.
ஆனால் அந்த முடிவு இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்ல, அனைத்து இனத்தவர்களுக்கும் பொருந்தும்.
குடியுரிமை அல்லாதவர்களின் பிரச்சினை இந்திய சமுதாயத்தில் மட்டுமல்ல. இன்னும் அதிகமானோர் மலாய், சீனர், ஈபான், கடஸான் இனத்திலும் உள்ளனர். அவர்களது இனத்திலும் சிவப்பு அடையாள அட்டையை கொண்டுள்ளவர்கள் அதிகம் உள்ளனர்.
அண்மையில் 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து இனத்தவர்களுக்கும் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது என்று கம்பார் மார்க்கெட்டில் மனிதவள அமைச்சின் மக்கள் சேவை மைய நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
No comments:
Post a Comment