ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
கடந்த 10 ஆண்டுகளாக சிலாங்கூர் மாநில அரசு எதிர்க்கட்சியாக திகழ்ந்த போதிலும் பக்காத்தான் ஆட்சியின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக இருந்த ஒரே காரணத்திற்காக எங்கள் ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இம்மாநிலத்தில் நிலவிய பல்வேறு பிரச்சினைகள் குறிப்பாக தண்ணீர் விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்தது.
மோசமான நிலையில் சாலை வசதி இருந்தாலும் கூட அதனை சீர் செய்வதற்கு பொதுப்பணி துறையின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை.
மாநில அரசாங்கத்தை நாங்கள் கொண்டிருந்தாலும் மத்திய அரசாங்கம் தேசிய முன்னணி வசம் இருந்ததால் முறையான உதவிகளும் ஆதரவும் இல்லாமல் வஞ்சிக்கப்பட்டோம்.
சில ஊடகங்கள் கூட தேமுவுக்கு ஆதரவாக சிலங்கூர் மாநில அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தன.
ஆனாலும் பக்காத்தான் தலைவர்கள் மீதும் அரசின் மீதும் மக்கள் நம்பிக்கைக் கொண்டு நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் மாநிலத்திலும் மத்திய அரசாங்கத்திலும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஆளும் பக்காத்தான் அரசாங்கம் மக்கள் நலத் திட்டங்களை நிச்சயம் மேற்கொள்ளும் என்று 'பெர்னாமா ரேடியோ'வுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கணபதி ராவ் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment