சென்னை-
திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வயது மூப்பு காரணமாக அவரது உடல் உறுப்புகள் சீராக செயல்படவில்லை என்பதால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த 24 மணிநேரத்திற்கு அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதை பொறுத்தே கணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையினால் திமுக தொண்டர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் முன்பு தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment