Saturday, 4 August 2018
7ஆம் தேதி முதல் பேரா சட்டமன்றக் கூட்டம்
ரா.தங்கமணி
ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேரா மாநிலத்தின் முதலாவது சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது என மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஙே கூ ஹாம் தெரிவித்தார்.
7ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத் தொடரை மாநில சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
இந்த கூட்டத் தொடரின்போது நேர விவாதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவருக்கான விவாத நேரம் 40 நிமிடத்திலிருந்து 1 மணி நேரமாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாக விவாத நேர 20 நிமிடத்திலிருந்து 30 நிமிடமாகவும் கேள்வி- பதில் நேரம் 1 மணியிலிருந்து 1 1/2 மணிநேரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்முறை எதிர்க்கட்சித் தலைவருக்கான தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு தனி அலுவலகம், அதிகாரப்பூர்வ வாகனம், 2 அதிகாரிகள், கார் ஓட்டுனர், மாதந்தோறும் கூடுதல் மானியம் ஆகியவை வழங்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment