Tuesday, 14 August 2018

'மேப்ஸ்' திட்டத்தின் வழி வெ.474 மில்லியன் நஷ்டம்- ஙா கோர் மிங்

ரா.தங்கமணி

ஈப்போ-
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது நிர்மாணிக்கப்பட்ட 'மூவி அனிமேஷன் பார்க் ஸ்டூடியோ'வின் (MAPS) மூலம் பேரா மாநில அரசு கடந்த ஐந்தாண்டுகளில்  474 மில்லியன் வெள்ளி நஷ்டத்தை அடைந்துள்ளது என பேரா மாநில ஜசெக தலைவர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

'2013- 2018 வரை இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பேரா மந்திரி பெசார் அஹ்மாட் பைசால் அஸுமு அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது ' என அவர் சொன்னார்.

'இந்த அறிக்கை வருத்தத்திற்குரியது. பக்காத்தான் கூட்டணி எதிர்க்கட்சியாக இருந்தபோது கடந்த தேமு அரசாங்கத்தை இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தினோம். ஆயினும் எங்களின் அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டன'.
இத்திட்டத்தில் மாநில முதலீட்டு நிறுவனம் பேரா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பேரா மேம்பாட்டு கழகம் (பிகேஎன்பி) 248 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்து மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது.

'இதற்கான கட்டணத்தை யார் செலுத்துவது?, மக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பது? என அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

வியாபார நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இத்திட்டத்திலிருந்து லாபகரமான நிதியை கொண்டு  வராத நிலையில் ஆளும் பக்காத்தான் அரசாங்கம் அதற்கான மாற்று நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என ஙா கோர் மிங் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment