ரா.தங்கமணி
ஷா ஆலம்-
இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படவுள்ள 400 கோடி வெள்ளி நாடாளுமன்ற தேர்வு குழு மூலம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் வலியுறுத்தினார்.
இந்த நிதியை 'செடிக்' எனும் தனி அமைப்பின் கீழ் பகிர்ந்தளிக்காமல் நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்களின் மூலம் நாடாளுமன்ற தேர்வுக் குழு அமைக்கப்பட்டு அதன் இந்த மானியம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே, 'செடிக்' அமைப்பி மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட மானியம் குறித்து பல்வேறான சர்ச்சைகள் நிலவுகின்ற நிலையில் தவறான முறையில் மானியங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
அதோடு, 'செடிக்' மூலம் வழங்கப்படும் மானியத்திற்கான கணக்கறிக்கை அந்த அமைப்பிடமே இருக்கும் நிலையில் இதில் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது.
இதுவே நாடாளுமன்ற தேர்வுக் குழு மூலம் பகிர்ந்தளிக்கப்படும்போது அதற்கான கணக்கறிக்கையை வெளிப்படைத்தன்மையாக இருப்பதோடு இதில் மோசடி புரிவதற்கு வாய்ப்பு இருக்காது.
மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும்போது அதில் எவ்வித முறைகேடும் இல்லாததை உறுதி செய்யும் வகையில் 'செடிக்' அமைப்பை விட நாடாளுமன்ற தேர்வுக் குழு அமைப்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கணபதி ராவ் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment