Thursday, 9 August 2018

டத்தோஸ்ரீ நஜிப் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

கோலாலம்பூர்-
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன ஊழல் விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இன்று செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட டத்தோஸ்ரீ நஜிப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அதனை அவர் ஒப்புக் கொண்டதற்காக பதிவு ஏதுமில்லை.

கடந்த நான்காண்டுகளுக்கு முன் 4 கோடி 20 லட்சம் வெள்ளியை தனது சொந்த வங்கி கணக்கில் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த குற்றங்கள் 2014 டிசம்பர் 26ஆம் தேதியிலிருந்து 2015 பிப்ரவரி 10ஆம் தேதி வரை இடைபட்ட நாளில் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பணத்தின் காட்டிலும் 5 மடங்கு அபராதம் அல்லது 50 லட்சம் அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம்.

No comments:

Post a Comment