Sunday, 5 August 2018

பேரா மஇகா மகளிர் பிரிவு; 3 தொகுதிகளில் போட்டி

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மஇகா மகளிர் பிரிவில்  3 தொகுதிகளுக்கு போட்டி நிலவுகின்ற சூழலில் 19 தொகுதிகளில் போட்டியில்லாமல் தலைவி, துணைத் தலைவி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இன்றுக் காலை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது பாகான் செராய், பத்துகாஜா, சுங்கை சிப்புட் ஆகிய மூன்று தொகுதிகளில் தலைவி, துணைத் தலைவிக்கான போட்டிக்கு இரு தரப்பினர் வேட்புமனு செய்தனர்.

பினாங்கு மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவி திருமதி பிரேமா தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட நிலையில் பேரா மாநில மஇகா மகளிர் தலைவி திருமதி தங்கராணி, பேரா சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment