Thursday, 23 August 2018
மின்சார கார்கள் அடிப்படையில் 3ஆவது தேசிய கார் திட்டம்- சேவியர் ஜெயகுமார்
புத்ராஜெயா-
தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்றாவது தேசிய கார் திட்டம், எரிபொருள் சேமிப்பு முறையை கையாளும் வகையில் மின்சார கார் திட்டத்தை கொண்டதாக இருக்கலாம் என நம்புவதாக நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.
இப்போது நடைமுறையிலுள்ள கார்கள் எரிபொருளில் (பெட்ரோல்) இயங்குவதாக உள்ள நிலையில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு தான் அவற்றின் பயன்பாடு இருக்கும் என்றும் அதற்கு பதிலாக ஆற்றல் சேமிப்பு முறைகள் தான் பயன்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழல் என்றும்
அதன் அடிப்படையிலேயே எரிபொருள் சேமிப்பு முறையை கொண்ட வாகனங்களை தயாரிப்பது ஆக்கரகமானதாகும் என்ற அவர், உலகளாவிய நிலையில் கார் ஜாம்பவன்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ், ஃபோக்ஸ், நிஸ்ஸான் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த ஆற்றல் சேமிப்பு முறைக்கு தாவி விட்டன என்றார்.
மின்சார கார்கள் மீது இளைஞர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ள இன்றைய காலகட்டத்தில் எரிபொருள் சேமிப்பு ஆற்றல் கொண்ட கார்கள் உருவாக்கப்படுவது ஆக்ககரமானது என்றும் அதற்கான ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் சொன்னார்.
மேலும் பெட்ரோலில் இயங்கும் கார்களை விட மின்சார கார்களின் விலை சற்று குறைவு தான் என்று அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment