ரா.தங்கமணி
ஈப்போ-
சித்திவானிலுள்ள தமிழ்ப்பள்ளியில் பயிலும் 3 மாணவர்கள் மீது சுடுநீர் ஊற்றியதை அடுத்து மேல் சிகிச்சைக்காக ஈப்போ தெங்கு பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்வரன் முகிலரசன், தர்ஷன் லோகநாதன், புவனேஸ்வரன் ஆகிய 8 வயது நிரம்பிய மூன்று மாணவர்கள் மீது நேற்று சுடுநீர் ஊற்றியதால் மஞ்சோங் வட்டார மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
4%-17% வரையில் மாணவர்களின் உடல், கை,கால் ஆகியவற்றில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இம்மூன்று மாணவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் ஈப்போ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இம்மூன்று மாணவர்களின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளதாக மாநில சுகாதார இலாகா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment