கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது 2/3 பெரும்பான்மை கமலேசியர்கள் மனநிறைவு கொண்டுள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது.
மெர்டேக்கா ஆய்வு மையம் மேற்கொண்ன ஆய்வில் இம்முடிவு கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 67 விழுக்காட்டினர் மனநிறைவு கொண்டுள்ளனர். இம்முடிவு முந்தைய முடிவை காட்டிலும் சரிவு கண்டுள்ளது. நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இம்முடிவு 87%ஆக இருந்தது.
அதோடு, பிரதமாக துன் மகாதீரின் தலைமைத்துவத்தை 71 விழுக்காட்டினர் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் இம்முடிவு 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 83 விழுக்காடாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment