Tuesday, 21 August 2018
டி'ஜென்ஸ் அழகு பயிற்சி நிலையம் ஏற்பாட்டில் முக ஒப்பனை பயிற்சி- 22 மகளிர் பங்கேற்பு
புனிதா சுகுமாறன்
பினாங்கு-
அண்மையில் டி' ஜென்ஸ் அகாடமியின் (D'janz beauty & bridal) ஏற்பாட்டில் முக ஒப்பனை பயிற்சி பட்டறை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முக ஒப்பனை பயிற்சி பட்டறை இங்குள்ள லெபோ பந்தாய் MPPP வாகன நிறுமித்துமிடத்தில் அமைந்துள்ள டிஜென்ஸ் அழகு பயிற்சி நிலையத்தில் நடைப்பெற்றது.
இந்த பயிற்சி பட்டறையில் பங்கெடுத்த 22 மகளிருக்கு தங்களது முகத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்வது, சருமம் பொலிவாக இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், முறையான முகஒப்பனை, கூந்தல் அலங்காரம், சேலை கட்டும் பயிற்சி போன்றவை பயிற்சிகள் வழங்கப்பட்டன என்று டி' ஜென்ஸ் பியூட்டி நிர்வாகி ஜெனட் தார்மின் தெரிவித்தார்.
முக ஒப்பனைத் துறையில் தாம் கற்ற பயிற்சியை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பயிற்சி பட்டறையை நடத்தப்பட்டது.
இதன் மூலம் வீட்டில் இருக்கும் பெண்கள் உபரி வருமானமாக இந்த துறையை மேற்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் இப்பயிற்சியை வழங்கியதாக அவர் கூறினார்.
இந்த பயிற்சி பட்டறையில் கலந்துக்கொண்ட 22 பெண்களுக்கும் பல்வேறான பயிற்சி நுணுக்கங்கள் வழங்கப்பட்டதாக கூறிய ஜெனட் தார்மின், இதே போன்ற முக ஒப்பனை பயிற்சியை தொடர்ந்து நடத்தவிருப்பதாகவும் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment