Sunday, 5 August 2018

பேரா மஇகா இளைஞர் பிரிவு; 22 தொகுதிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியில்லை


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மஇகா இளைஞர் பிரிவுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுக் காலை நடைபெற்ற நிலையில் 22 தொகுதிகளுக்கு எவ்வித போட்டியும் இல்லாமல் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தஞ்சோங் மாலிம், தைப்பிங் ஆகிய இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டதால் பிற  தொகுதிகள் எவ்வித போட்டியும் எதிர்நோக்கவில்லை.

தேசிய மஇகா இளைஞர்  துணைத் தலைவர் தினாளன் ராஜகோபாலு, செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன் ஆகியோர் இந்த வேட்புமனுத் தாக்கலை வழி நடத்தினர். பேரா  மஇகா துணைத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம், செயலாளர் தங்கராஜ் ஆகியோர் சிறப்பாளராக கலந்து கொண்டனர்.

பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவின் நடப்புத் தலைவர் நேருஜி முனியாண்டி சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவியை தற்காக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment