Wednesday, 4 July 2018

ஜமால் யூனோஸ் இந்தோனேசியாவில் கைது


ஜாகர்த்தா-

மலேசிய போலீசாரிடமிருந்து இந்தோனேசியாவுக்கு தப்பி ஓடி சென்ற சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர்  டத்தோஶ்ரீ ஜமால் யூனேஸ் இந்தோனேசிய போலீஸ் அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டார்.

48 வயதான ஜமால் நேற்று (ஜூலை 2) மாலை 6.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

சிவப்பு சட்டை பேரணியின் தலைவருமான ஜமால் யூனோசை மலேசியாவுக்கு கொண்டு வரும் வகையில் மலேசிய போலீஸ் படை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக  உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு அக்டோபர் 5ஆம் தேதி 'பீர் திருவிழா'வை ஆட்சேபிக்கும் வகையில் சிலாங்கூர் அரசு செயலகம் முன்பு பீர் போத்தல்களை உடைத்து பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதன் தொடர்பில் ஜமாலை போலீசார் கைது செய்ய விசாரணை மேற்கொள்ள முனைந்தனர்.

கடந்த மே 25ஆம் தேதி அம்பாங் நிபுணத்துவ மருத்துவமனையில் இருந்து ஜமால் யூனோஸ் தப்பிச் சென்றதாக போலீஸ் கூறியது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி ஜமாலை கைது செய்வதற்கான உத்தரவு ஆணையை போலீசார் வெளியிட்டனர்.



No comments:

Post a Comment