Wednesday, 4 July 2018

டத்தோஶ்ரீ சக்திவேல் தலைமையில் பேரா மாநில பொருளாதார மேம்பாட்டுக் கூட்டுறவு கழகம் தோற்றுவிக்கப்பட்டது


ரா.தங்கமணி

ஈப்போ- 

வர்த்தகத் துறையில் நன்கு அறிமுகமான சுங்கை சிப்புட் வணிகர் டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேலை தலைவராகக் கொண்டு பேரா மாநில பொருளாதார மேம்பாட்டுக் கூட்டுறவு கழகம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமைப்புக் கூட்டத்தில் 50 உறுப்பினர்கள் முன்னிலையில் 9 இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

ஆ.சக்திவேல், பொ.யசோதா, இ.சண்முகம், நோர்டின் பின் முகமட் நோர், ஆ.குமாரவேல், இரா. கண்ணன், இரா.கிருஷ்ணராஜு, கோ.கேசவன், சி.பரமசிவம் ஆகியோர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் மாநிலந்தோறும் திருமண மண்டபங்கள் கட்டுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment