Wednesday, 4 July 2018

டத்தோஶ்ரீ நஜிப் கைது செய்யப்பட்டார்

புத்ராஜெயா-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று 2.35 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டார்.

டத்தோஶ்ரீ நஜிப்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ட த்தோஶ்ரீ சுக்ரி அப்துல் உறுதிப்படுத்தினார்.

1எம்டிபி நிறுவனத்துடன் தொடர்புடைய எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் கார்ப்பரேஷனில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை காலை கோலாலம்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் டத்தோஶ்ரீ நஜிப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் என எம்ஏசிசி தெரிவித்தது.

No comments:

Post a Comment