ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்திற்குட்பட்ட சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாஃபி இன்று காலை ன்11.10 மணியளவில் காலமானார்.
புற்றுநோய் காரணமாக சுபாங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மரணமடைந்தார்.
இன்று மாலை தொழுகைக்கு பின்னர் அவரது நல்லுடல் ஷா ஆலம், செக்ஷன் 21இல் உள்ள இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்படவுள்ளஹு.
சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளராக சுஹாய்மி இதற்கு முன் பணியாற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment