Monday, 16 July 2018

ஆக.19இல் ஆடிப்பூர பால்குட ஆன்மீக ஊர்வலம்

ஷா ஆலம்-
தமிழ்நாட்டில் மிக விமரிசையாக நடைபெறும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருவிழாவை முன்னிட்டு  மலேசியாவிலும் முதன் முதலாக ஆடிப்புர திருவிழா  விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

தாமான் ஶ்ரீ மூடா, புக்கிட் கெமுனிங் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து ஓம் சக்தி ஆன்மீக அறப்பணி இயக்கத்தின் ஏற்பாட்டுல் செவ்வாடை அணிந்து பால்குட ஊர்வலம் நடைபெறும் என  ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களில் ஒருவரான மணிமாறன் முனுசாமி  கூறினார்.

ஆகஸ்ட்  19ஆம் தேதி காலை 6.45 மணிக்கு தொடங்கும் பால்குட ஊர்வலம் மதியம் 12.00 மணியளவில் முடிவுறும் என்பதுடன் தொடர்ந்து  நடைபெறும் அன்னதானத்திலும் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

ஶ்ரீ மூடாவில் இருந்து புக்கிட் கெமுனிங் மாரியம்மன் ஆலயம் வரை பக்தர்கள் பால்குடம் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.

இந்த ஆன்மீக ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் 1 லிட்டர் பால், குட ம் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும் என்பதுடன் சிவப்பு ஆடையைத்தான் அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வேளையில் ஶ்ரீ மூடா மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் குமரேசன், புக்கிட் கெமுனிங் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் பெருமாள் ஆகியோருக்கும் இவ்வேளையி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என ஓம் சக்தி ஆன்மீக அறப்பணி இயக்கத்தின் தலைவர் சக்தி ஜெயா அசோகன் குறிப்பிட்டார்.

ஆடிப்பூர பால்குட திருவிழாவில்பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

முன்பதிவுக்கு பக்தர்கள் 014- 6693877, 016-9162714, 016-2213128 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





No comments:

Post a Comment