Sunday, 3 June 2018

ஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்

 
ஜொகூர் பாரு-
 மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்காண்டாரின் தாயார் கால்சோம் அப்துல்லா  லண்டனில் காலமானார்.

83 வயதான அவர் முதுமை காரணமாக நேற்று லண்டனில் காலமானதை  ஜொகூர் அரச பத்திரிகை தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியது.
அவரின் நல்லுடல் அடக்கம் பற்றிய தகவல் பின்னர் ஜோகூர் அரச மன்றத்தால் அறிவிக்கப்படும்.

ஜொகூர் சுல்தான் தாயாரின் இறுதிச் சடங்கு முடிவடையும் வரை ஜொகூர் மாநில, மாவட்ட கொடிகள் இன்று முதல் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

1935ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி லண்டனில் பிறந்த அவர், காலஞ்சென்ற சுல்தான் இஸ்காண்டார் இப்னி சுல்தான் இஸ்மாயிலை கரம் பிடிக்க இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment