Tuesday, 22 May 2018

பொய் செய்தி தடுப்பு சட்டம் அகற்றப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங்


கோலாலம்பூர்-
கடந்த ஏப்ரல் மாதம் அங்கீகரிக்கப்பட்ட பொய் செய்தி தடுப்பு சட்டம் அகற்றப்படும் என தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

இச்சட்டம் அகற்றப்படுவது தொடர்பில் பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடம் பரிந்துரைக்கப்படும் எனவும் விரைவில் இச்சட்டம் அகற்றப்படும் எனவும் அவர் சொன்னார்.

பக்காத்தான் ஹராப்பானின் கொள்கை அறிக்கைக்கு ஏற்ப அச்சட்டம் அகற்றப்படும். ஆனால் அதற்கு முன் சிலவற்றை ஆராய வேண்டியுள்ளது.
ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதே எனக்கு முக்கியம். ஊடகங்களும் அச்சு நிறுவனங்களும் ஏற்கெனவே பல்வேறு சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதலால் இந்நாட்டில் ஊடகச் சுதந்திரத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதனை அமல்படுத்த வேண்டும் என்பதே நமக்கு அவசியமானது.

கொடுத்த வாக்குறுதிக்கேற்ப 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்டும் என கூறிய அவர், நாளை காலை 8.30 மணிக்கு எனது பணியை தொடங்குகிறேன். அதன் பின்னரே அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவேன் என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment