Saturday, 19 May 2018

நூருல் இஸா அமைச்சரவையில் இடம்பெற மாட்டார்- டத்தோஶ்ரீ அன்வார்


கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் நூருல் இஸா இடம்பெற மாட்டார் என பிகேஆர் கட்சியின் ஆலோசகரும் அவரின் தந்தையுமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஒரு குடும்பமே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது என்பதை தவிர்க்கும் பொருட்டு இந்த அமைச்சரவையில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான  நூருல் இஸா எந்தவொரு பதவிகளையும் வகிக்க மாட்டார் என்றார் அவர்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி புதிய அமைச்சரவையை விரைவில் அமைக்கவுள்ளது.

பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா துணைப் பிரதமராக பதவியேற்றுள்ளார்.


No comments:

Post a Comment