ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து மைபிபிபி கட்சி விலகிக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம். கேவியஸ் இன்று அதிரடியாக அறிவித்தார்.
தேமுவிலிருந்து விலகிக் கொள்ளும் மைபிபிபி தற்போது சுயேட்சை கட்சியாக திகழ்வதால் நடப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும்.
தேமுவிலிருந்து மைபிபிபி விலகுவது குறித்து கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியே முடிவெடுக்கப்பட்டதாகவும் ஆனால் கட்சியில் உள்ள சிலர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தால் அப்போது இம்முடிவு அறிவிக்கப்படவில்லை.
மைபிபிபி கட்சிக்கு நானே தேசியத் தலைவர் என்பதை ஆர்ஓஎஸ் நேற்று உறுதிப்படுத்தியது. கட்சியின் சட்டவதிகளை மீறுபவர்கள் தானாகவே கட்சி உறுப்பினர் அந்தஸ்த்தை இழப்பர் எனும் நிலையில் கட்சியில் கலகம் உண்டாக்கியவர்கள் உறுப்பினர் அந்தஸ்த்தை இழந்துள்ளனர் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.
No comments:
Post a Comment