புத்ராஜெயா-
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு நிதி வழங்கப்பட்டது தொடர்பிலான விசாரணைக்க்காக மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வந்தார்.
இரண்டாவது முறையாக இந்த விசாரணைக்காக டத்தோஶ்ரீ நஜிப் வந்தார்.
1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி நிறுவனத்திற்கு நிதி வழங்கப்பட்டது தொடர்பில் டத்தோஶ்ரீ நஜிப் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே கடந்த செவ்வாய்க்கிழமை எம்ஏசிசி விசாரணைக்கு வந்த நிலையில் இன்று மீண்டும் டத்தோஶ்ரீ நஜிப் விசாரணைக்கு வந்துள்ளார்.
No comments:
Post a Comment