Saturday, 19 May 2018

சீரியலை மிஞ்சிய மகாதீரின் 'சீரியஸ்'


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மலேசிய நாட்டின் 7வது பிரதமராக பதவியேற்ற துன் மகாதீர் நாட்டு மக்களுக்கு அதிரடியான நல்ல விஷயங்களை ஓய்வின்றி செய்துகொண்டிருப்பதை சமூக வலைதளங்கள் வழியாக மக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை  ஒருவாரகாலமாக அறிய முடிகிறது.

14வது பொது தேர்தலுக்கு பின் மக்களிடையே புத்துணர்வும் புது தெம்பும்  ஏற்பட்டுள்ளதை அவர்களது அன்றாட நடவடிக்கையின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக, துன் மகாதீர் தினந்தோறும் மக்களுக்கு கொண்டு வரும் திட்டங்களை முகநூல், விவேக கைதொலைபேசியின் வாயிலாக அறிந்து கொள்ளும் மக்கள்,  அவர் அடுத்து என்னன்ன திட்டங்களைக் கொண்டு வரபோகிறார், அதிரடியாக எதை அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு சந்தை, உணவுப் பகுதிகளில் உலாவும் மக்கள் ஏதேனும் எதிர்பார்ப்புரனேயே காணப்படுகின்றனர்.

துன் மகாதீர் மீதான எதிர்பார்ப்பு ஆண்களை மட்டுமின்றி வீட்டிலுள்ள பெண்களையும் தொற்றிக் கொண்டுள்ளது எனலாம்.

எப்போதும் சீரியலை (தொடர் நாடகங்கள்) பார்த்து நேரம் கழித்துக் கொண்டிருந்த குடும்பப் பெண்கள் துன் மகாதீரின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

14ஆவது பொதுத் தேர்தல் மூலம் மக்களிடையே ஓர் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது குடும்பப் பெண்களிடையே அரசியல் விழிப்புணர்வு மெல்ல மெல்ல துளிர் விட தொடங்கியுள்ளது.



No comments:

Post a Comment