ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் துன் ச.சாமிவேலு தனது வாக்கை செலுத்தினார்.
காலை 9.30 மணியளவில் மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளிக்கு வருகை புரிந்த அவரை இத்தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி வரவேற்றார்.
அதோடு லிந்தாங் சட்டமன்றத் தொகுதி தேமு வேட்பாளர் டத்தோ சூல்கிப்ளி, ஜாலோங் சட்டமன்ற தேமு வேட்பாளர் டத்தோ டான் லியான் ஹோ ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
மேலும் டத்தோஶ்ரீ தேவமணி, இத்தொகுதி பிகேஆர் வேட்பாளராக களமிறங்கியுள்ள எஸ்.கேசவன், பிஎஸ்எம் வேட்பாளர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் ஆகியோர் வாக்களிப்பு மையங்களுக்கு சென்று நிலவரங்களை கண்காணித்தனர்.
No comments:
Post a Comment