Thursday, 17 May 2018

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுதலை


கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வழங்கிய வாக்குறுதிபடி பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

தனது உதவியாளருடன் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், 1,557 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று விடுதலை செய்யப்பட்டார்.

செராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டத்தோஶ்ரீ அன்வார்
இன்று விடுதலையாகியுள்ள நிலையில், 1,000 ஆதரவாளர்களின் உற்சாக வரவேற்புடன் அவர் வெளியேறினார்.

பின்னர் பொது மன்னிப்புக்காக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி ஆகியோருடன் மாமன்னரை சந்திக்க அரண்மனை நோக்கி சென்றனர்.

No comments:

Post a Comment