Wednesday, 9 May 2018

நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் - ஃபாமி பாட்ஸில்




செய்தி - படங்கள் : செழியன்

கிள்ளான் லாமா, மே 8-
இந்த தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் என்றதும் பலர் என்னை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளிலும் இழிவுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டு வருவதாக லெம்பா பந்தாய் நாடாளுமன்றத்தின் நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளரும் மக்கள் நீதிக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவருமாகிய ஃபாமி பாட்ஸில் குறிப்பிட்டார்.

மக்கள் நீதிக் கட்சி மூலமாக லெம்பா பந்தாய் மட்டுமின்றி பல தொகுதிக்களிலும் நான் சேவையாற்றியுள்ளேன். இம்முறை கட்சி என்னை லெம்பா பந்தாய் நாடாளுமன்றத்தின் நிறுத்தியுள்ளனர். என் மீது காழ்புணர்வு கொண்ட செலர் என் படம் பதித்த பதாகைகளை வேண்டும் என்றை சேதப்படுத்துகின்றனர்.

இந்த தேர்தல் கருவிகள் அனைத்தும் இலவசமாக கிடைத்தவை அல்ல. மாறாக ஒவ்வொன்றும் பணம் கொடுத்து வாங்கப்பட்டது. ஆதலால் சில பொறுப்பற்ற தரப்பினர் செய்யும் இது போன்ற அடாவடி தனத்தால் என் தரப்பு ஆதரவாளர்கள் மிகவும் கோபம் கொள்கின்றனர் என்று ஃபாமி கூறினார்.

தேர்தலுக்கு பிறகாவது இது போன்ற முறையற்ற காரியங்களில் ஈடுப்படாமல் நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் என தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment