கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது
பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் சார்பாக நியமிக்கப்படும்
அமைச்சர்களின் பெயர் பட்டியல் இன்று மாலை 5.00 மணிக்கு மாமன்னரிடம் ஒப்படைப்பதாக பிரதமர்
துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
பிரதமர் முன்மொழிந்த
அமைச்சர்களின் பெயர் பட்டியல் இன்று அரண்மனையில்
மாமன்னரிடம் ஒப்படைக்கப்படும்.
கடந்த 10ஆம் தேதி
துன் டாக்டர் மகாதீர் பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
பிரதமராக பதவியேற்ற
பின், நிதியமைச்சராக லிம் குவான் எங், தற்காப்பு அமைச்சராக முகமட் சாபு, உள்துறை அமைச்சராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் ஆகியோரை நியமித்தார் மகாதீர்.
அதோடு, நாட்டின்
கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், கல்வி அமைச்சர் பொறுப்பை தாமே ஏற்பதாக நேற்று
அதிரடியாக அறிவித்த துன் மகாதீர், மகளிர் நல அமைச்சராக டத்தோஶ்ரீ
வான் அஸிஸாவை நியமித்தார்.
மேலும், 13 அமைச்சர்கள் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படுவர் எனும் நிலையில், அவர்களின் பெயர் பட்டியலை இன்று மாமன்னரிடம்
ஒப்படைக்கிறார் துன் மகாதீர்.
No comments:
Post a Comment