Sunday, 6 May 2018

எதிர்க்கட்சியினரின் போலி புகைப்படங்களை நம்பாதீர்- டத்தோஶ்ரீ ஸம்ரி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
எதிர்க்கட்சினர் பகிரும்   போலி புகைப்படங்களை பார்த்து  மக்கள் ஏமாறக்கூடாது  என்று பேராக் மாநில மந்திரி  பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் வலியுறுத்தினார்.

மக்களை கவர்வதற்காக எதிர்க்கட்சியினர் பல்வேறு வித்தைகளை அரங்கேற்றலாம். அதில் ஒன்றுதான் உண்மைக்கு புறம்பான தகவலை பகிர்வதாகும்.

வரும் பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும்  உண்மைக்கு புறம்பான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர் என  இன்று சுங்கைசிப்புட் தொகுதியில் நடைபெற்ற பிரதமரின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் ஒரே அரசியல் கட்சி என்றால் அது தேசிய முன்னணி மட்டும்தான் என்பதை மக்கள் நன்கு உணர வேண்டும் என டத்தோஶ்ரீ ஸம்ரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment